செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் காந்தி ஜெயந்தி அன்று வெளியாகும் ‘உத்தம வில்லன்’…!

காந்தி ஜெயந்தி அன்று வெளியாகும் ‘உத்தம வில்லன்’…!

காந்தி ஜெயந்தி அன்று வெளியாகும் ‘உத்தம வில்லன்’…! post thumbnail image
‘விஸ்வரூபம்’ படத்திற்கு பிறகு கமல் நடித்து வரும் படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடிக்கின்றனர். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்படம் எப்போதும் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கும் வேளையில், இப்படத்தை வரும் காந்தி ஜெயந்திக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸும் இணைந்து தயாரிக்கிறது.

ஜிப்ரான் இசையில் காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி