இதன் காரணமாகத்தான் விக்ரம் குமார் ‘அஞ்சான்‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். பொதுவாக தாங்கள் அடுத்து நடிக்கும் படங்களின் இயக்குனர்களையோ, தயாரிப்பாளர்களையோ அவரவர் விழாக்களுக்கு நடிகர்கள் வரவழைப்பது வழக்கம். அப்படித்தான் ‘அஞ்சான்’ விழாவிலும் விக்ரம் குமார் கலந்து கொண்டுள்ளார்.விக்ரம் குமார் இயக்கும் படம் ‘மனம்’ படத்தைப் போன்று குடும்பப் படமாக இருக்குமா, அல்லது ‘யாவரும் நலம்’ படத்தைப் போன்று திகில் படமாக இருக்குமா என்பதுதான் தற்போதைய கேள்வி.
அப்படி ‘மனம்’ படம் போன்று இருக்கும் பட்சத்தில் அந்தப் படத்தில் சூர்யாவுடன், ஜோதிகா, சிவகுமார், கார்த்தி ஆகியோரில் யாராவது நடிக்கும் வாய்ப்பும் உள்ளதாகத் தெரிகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனக்கும், ஜோதிகாவுக்கும் பொருத்தமான கதை கிடைத்தால் மீண்டும் சேர்ந்து நடிப்போம் என்று சூர்யா கூறியிருந்தார். அது அநேகமாக விக்ரம் குமார் இயக்கும் படம் மூலம் நடந்தாலும் நடக்கலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி