செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. கண்டனம்!…

கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. கண்டனம்!…

கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. கண்டனம்!… post thumbnail image
சவுதம்டன்:-நாட்டிங்காம் டெஸ்டின் போது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஜடேஜாவை வசைபாடி அவரை தள்ளிவிட்ட புகாரில் ஆண்டர்சன் மீது வருகிற 1–ந்தேதி விசாரணை நடக்க உள்ளது.அதே சமயம் தன்னை மிரட்டும் வகையில் ஜடேஜா ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக ஆண்டர்சன் கூறிய புகாரில் ஜடேஜாவுக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி நடுவர் டேவிட் பூன் அபராதமாக விதித்தார்.

இந்த தீர்ப்பால் கொதித்து போன இந்திய கேப்டன் டோனி, எந்த தவறும் செய்யாத ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது வேதனைக்குரியது. எங்கள் தரப்பு நியாயங்களை புறக்கணித்து விட்டனர் என்று பேட்டியின் போது பகிரங்கமாக குற்றசாட்டினார்.இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக்கும் இந்த விவகாரத்தில் சில கருத்துகளை கூறியிருந்தார். இந்த நிலையில் டோனியின் பேட்டிக்கு ஐ.சி.சி. கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினையில் டோனியும், குக்கும் வெளிப்படையாக தெரிவித்த சில கருத்துகள் ஐ.சி.சி. ஒழுங்கு நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளன. கவனமுடன், இரு தரப்பு ஆதாரங்களையும் பரிசீலித்து டேவிட் பூன் எடுத்த முடிவு எங்களுக்கு திருப்தி அளிக்கிறது.எனவே இந்த தீர்ப்பை சம்பந்தப்பட்ட அனைவரும் மதிக்க வேண்டும். இது போன்ற சட்ட ரீதிரியான பிரச்சினையில் கருத்துகளை வெளியிடும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று ஐ.சி.சி. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி