புதுடெல்லி:-இணையதள உலகில் கொடிகட்டி பறக்கும் கூகுள் நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ‘மேபதோன் 2013’ என்ற பெயரில் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளை இணைத்து அந்த நிறுவனம் வரைபடம் வெளியிட்டது.
இந்திய சர்வே நிறுவனத்திடம் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சிக்கலான பகுதிகளை அந்த வரைபடத்தில் இணைத்திருந்தது அப்போது கண்டுபிடிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து இந்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய சர்வே ஜெனரல் சி.பி.ஐ.யிடம் இது குறித்து புகார் அளித்தார். இந்திய வரைபடத்தில் கூட இணைக்கப்படாத பல்வேறு பகுதிகளை இந்த வரைபடத்தில் இணைத்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் கூகுள் நிறுவனம் மீது தங்கள் பூர்வாங்க விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி