செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்!…

ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்!…

ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலை கழகத்தின் பேராசிரியர் சாம் வான் அகேன்.இவர் ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்துள்ளார். தற்போது இவர் வளர்த்த மரத்தில் 40 வகையான பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. மட்டுமின்றி பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையில் மிகவும் அழகிய தோற்றத்தை உடையதாகவும் உள்ளது.

இதுகுறித்து சாம் வான் அகேன் கூறுகையில்,என்னுடைய ஆராய்ச்சியின் பயனாக, அம்மரத்தை குளிர்காலத்தில் பார்ப்பவர்களுக்கு செம்பழுப்பு, ஊதா மற்றும் வெள்ளை என வானவில்லை போல் காட்சியளிக்கிறது.கோடை காலத்தில் அம்மரம் பல்சுவை கொண்ட பழங்களை வழங்குகிறது. மேலும், இதுபோன்ற வகையில் தாவர ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வேன் என்று சாம் வான் அகேன் பெருமையுடன் கூறுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி