ஒருநாள் இருவரும் மார்க்கெட் சென்று திரும்பி வரும்வேளையில் மழை வந்துவிடுகிறது. மழையில் நனைந்துகொண்டே வீடு திரும்புகிறார். அப்போது, ஸ்வாதி வர்மா அவனை அடைய விரும்புகிறாள். ஆனால், திலக்கோ அதில் விருப்பம் இல்லாமல் அங்கிருந்து சென்றுவிடுகிறான். இப்படி ஒவ்வொரு முறையும் அவனை அடையவிரும்பும் பொழுதெல்லாம் திலக் அவளிடமிருந்து விலகிச் செல்கிறான்.ஒருமுறை திலக்கின் பிறந்தநாளுக்காக அவனுக்கு டீ-ஷர்ட் பரிசாக அளிக்கும் ஸ்வாதி, கூடுதல் பரிசாக ஒரு முத்தத்தையும் வழங்கிவிடுகிறாள். அந்த முத்தத்தால் அவளை மறக்க முடியாமல் தவிக்கிறான் திலக். பிறகு அவளின் ஆசைக்கு இணங்கியும் விடுகிறான். அன்று முதல் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வருகிறார்கள். அதிலிருந்து திலக் யாரைப் பார்த்தாலும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறான். படிப்பு நிமித்தமாக இவரது வீட்டிற்கு வரும் பாபிலோனாவிடமும் இவர் காம வலை விரிக்கிறார். அந்த வலையில் அவளும் விழுந்துவிடுகிறாள். இதற்கிடையில், யாரென்று தெரியாத ஒரு பெண் திலக்கிற்கு போன் செய்து அவனை காதலிப்பதாக கூறிவருகிறாள். அவளை திலக் வெறுத்து வருகிறான்.
இதற்கிடையில், ஸ்வாதியின் கணவன் வெளிநாட்டில் இருந்து வந்துவிடுகிறார். வந்த இடத்தில் வேலையிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் கணவனுக்குத் தெரியாமல், திலக்கை வீட்டிற்கு அழைத்து அவனுடன் உறவு கொள்கிறாள். இதை அவளது கணவன் பார்த்துவிடுகிறார்.இறுதியில் தனக்கு துரோகம் செய்த ஸ்வாதி வர்மாவை அவரது கணவன் என்ன செய்தார்? திலக்கை காதலிப்பதாக கூறும் அந்த பெண் யார்? திலக்கின் எதிர்காலம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.நாயகன் திலக், நாயகனுக்குண்டான இளமை துடிப்புடன் வருகிறார். இவருக்கு காமவலை விரிக்கும் ஸ்வாதியிடமிருந்து இவர் மனமில்லாமல் பிரிந்து செல்லும் காட்சிகள் நமக்கும் ஏமாற்றத்தை தருகிறது. ஸ்வாதி வர்மா படம் முழுக்க கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார். இவர் தனது முன்னழகையும், பின்னழகையும் காட்டி ரசிகர்களை கிறங்கவைக்கிறார்.
குறிப்பாக, பழைய பாத்திரங்களை மேலே அடுக்கி வைக்கும் காட்சியில் இவர் அணிந்திருக்கும் ஆடையை பார்க்கும்போது நம் கண்கள் இமைகளை மூட மறுக்கிறது. அந்தவொரு காட்சியை மட்டும் குறிப்பிட்டு சொல்லமுடியாது. இவர் வரும் எல்லா காட்சிகளுமே நமக்கு அந்த உணர்வைத்தான் கொடுக்கின்றன. படத்திற்கு முழு பலமும் இவருடைய கவர்ச்சி தான் என்று சொன்னால் அது மிகையாகாது. பாபிலோனா ஒருசில காட்சிகளே வந்தாலும் அவரும் ரசிகர்களை ஏமாற்றவில்லை.”கூடா நட்பு கேடில் முடியும்” என்ற பழமொழியை மையக்கருத்தாக கொண்டு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சி.வி.சாகர். சொல்லவந்த கருத்தை கவர்ச்சி சாயம் பூசி சொல்லியிருக்கிறார். படத்தின் புகைப்படங்களை பார்த்து படத்தை பார்க்க வருபவர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். கவர்ச்சியை தவிர்த்து பார்த்தால், இன்றைய இளைய சமுதாயத்திற்கு நல்ல ஒரு கருத்தை சொல்லும் படமாக இது இருக்கும். த்ரிநாத்தின் பின்னணி இசை பரவாயில்லை. ராஜேந்திர பிரசாத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு நல்ல விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘இன்பநிலா’ கவர்ச்சி………..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி