செய்திகள்,பரபரப்பு செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இந்திய பறவைகள்!…

அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இந்திய பறவைகள்!…

அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இந்திய பறவைகள்!… post thumbnail image
மும்பை:-சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் இந்தியாவில் அழிந்து வரும் உயிரினங்கள் மற்றும் விரைவில் அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. பம்பாய் இயற்கை வரலாறு சங்கம் மற்றும் சர்வதேச பறவைகள் வாழ்வு அமைப்புகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதில் இந்தியாவில் அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் விரைவில் 173 பறவை இனங்கள் இடம் பெறும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்த பட்டியலில் இந்திய பறவை இனங்களான கம்பளி கழுத்து நாரை, அந்தமான் நீலம், சிவப்பு தலை ஆந்தை, இமாலயன் கிரிபான், தாடி கழுகு, அந்தமான் பச்சை புறா, சாம்பல் நிற தலை பச்சை புறா, யுனன் நியுதாச் ஆகிய 8 பறவை இனங்கள் இடம் பெற்று உள்ளன.

காட்டு தீ, பெருகி வரும் கட்டிடங்களால் அழிந்து வரும் காடுகள், வேட்டையாடுதல், அதிகரிக்கும் வேதியியல் பொருட்களின் பயன்பாடு போன்றவற்றால் அரியவகை பறவை இனங்கள் அழிந்து வருவதாக அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி