தமிழக புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் இயக்கம் இதனை கண்டித்து உள்ளது. மாநில சுகாதார துறையிடமும் மத்திய தணிக்கை குழுவிடமும் இது குறித்து புகார் அளித்துள்ளது.
புகையிலை எதிர்ப்பு இயக்கத்தின் அமைப்பாளர் சிரில் அலெக்சாண்டர் கூறும் போது, வேலை இல்லா பட்டதாரி படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது.
இதில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் நிறைய உள்ளன. படத்தை விளம்பரபடுத்துவதற்காக தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சிகளை போஸ்டர்களாக அச்சிட்டும் ஒட்டி உள்ளனர். இது புகையிலை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது ஆகும். தனுஷ் பிரபலமான நடிகர். சுகாதார கொள்கைகளை உள்ளடக்கிய புகையிலை கட்டுப்பாடு சட்டத்தை அவர் மீறி இருக்கிறார். தமிழக அரசு தனுஷ் புகை பிடிப்பது போல் ஒட்டப்பட்டுள்ள அனைத்து போஸ்டர்களையும் அகற்ற வேண்டும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி