எத்தனை உயரத்தில் வளர்ந்தாலும் பணிவு அவர்கூடவே இருக்கிறது. இதைத்தான் சிவகுமாரின் பெயரை சூர்யா கெடுத்து விடுவார் போலிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.அதையடுத்து, நான் இந்த அரங்கிற்குள் வந்ததும் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து எனக்கு வணக்கம் சென்னார் சூர்யா. அப்போது நான் உங்ககூட ஒரு படத்துல நடிக்கிறேன் தெரியுமா? என்று என்னைப்பார்த்து கேட்டார். ஆனால் இந்த கேள்வியை நான்தான் அவரைப்பார்த்து கேட்டிருக்க வேண்டும்.
காரணம், அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில்தான் நான் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். அப்படியிருக்க, என் படத்தில் அவர் நடிப்பது போல் சொல்கிறார். அந்த அளவுக்கு சீனியர்களுக்கு மதிப்பு கொடுக்கிறார் சூர்யா என்று ஏகத்துக்கு எடுத்து விட்டார் பார்த்திபன்.இதை எதிரே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த சூர்யா, ஐஸ் கட்டியாய் உருகி வழிந்து கொண்டிருந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி