கிளாஸ்கோ:-காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அபினவ் இறுதிச்சுற்றில் 205.3 புள்ளிகள் பெற்றார். 202.1 புள்ளிகள் பெற்ற வங்காளதேச வீரர் பாகி வெள்ளிப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா இது தனக்கு கடைசி காமன்வெல்த் போட்டி என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இந்தியாவுக்கு இன்று இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 தங்கம், 4 வெள்ளி 2 வெண்கலம் என 9 பதக்கங்களை பெற்றுள்ள இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் நீடிக்கிறது.
17 பதக்கங்களுடன் இங்கிலாந்து முதலிடத்திலும், 15 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், 10 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து 3-வது இடத்திலும் உள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி