விக்ரம் பிரபுவின் அடுத்த படம் ‘சிகரம் தொடு’ . ‘தூங்கா நகரம்’ படத்தை இயக்கிய கௌரவ் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மோனல் கஜ்ஜார் நடித்து வருகிறார்.
இமான் இசையமைக்கும் இப்படத்தில் சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், சதீஷ், கோவை சரளா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தனக்கென்று இசையில் தனித்தன்மை உருவாக்கியுள்ள இமான் இசை என்பதால் இந்தப் படத்தின் இசைக்கும் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன..
தற்போது இப்படத்தின் இசை ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.மேலும் இசை வெளியீடு கமல் முன்னிலையில் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சிவாஜி குடும்பத்துடன் உள்ள நட்பு காரணமாக இந்த விழாவின் அழைப்பிற்கு சற்றும் சிந்திக்காமல் கமல் ஒப்புக் கொண்டுள்ளாராம்.
‘இவன் வேற மாதிரி’ படத்தைத் தொடர்ந்து யுடிவி இரண்டாவது முறையாக ‘சிகரம் தொடு’ படத்தைத் தயாரிக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி