சென்னை:-நடிகர் அஜித் நடிக்கும் 55-வது படத்தை பற்றிய ருசிகர தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ‘தேவி அஜித்’ ஒருவரும் நடிக்கிறாராம். மலையாள நடிகையான இவருக்கு படத்தில் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.தேவி அஜித் சில மலையாள படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படத்தில் அஜித் இரட்டை வேடம் ஏற்றிருக்கிறார். ஒன்று அவரது சமீபத்திய வழக்கமான ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றம், மற்றொன்று மிகவும் இளமையான டீன் ஏஜ் கதாபத்திரமாம். அஜித் ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி