ஆனால், இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக அஞ்சான் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், மதன் கார்க்கி, விவேகா, கபிலன் என பாடல்களை உருவாக்கியவர்களுக்கு விழா மேடையில் முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள்.இவர்களுடன் அஞ்சான் படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கும் சூர்யா மற்றும் யுடிவி தனஞ்செயன், லிங்குசாமி, சுபாஷ் சந்திர போஸ், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சூரி, வசனகர்த்தா பிருந்தா சாரதி ஆகியோருடன் படத்தில் பணியாற்றிய முக்கிய டெக்னீயஷன்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.இந்த ரகசிய இசைவெளியீட்டு விழாவில் விவேகா எழுதி பென்னி தயாள், ஸ்வேதா பண்டிட் பாடிய ஒரு கண் ஜாடை என்ற பாடலின் ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது.ங்… பேங்… பேங்… பாடலும், சூர்யா பாடிய ஏக் தோ தீன் சார்… பாடலும் திரையிடப்பட்டது. விழாவின் முடிவில் அஞ்சான் படத்தின் ஆடியோ சிடியை வந்திருந்த முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கினார்கள். ‘அஞ்சான்’ விழாவில், நடிகர் சூர்யாவிடம் அவரது ரசிகர்கள் சில கேள்விகளைக் கேட்டனர்.
லிங்குசாமி உருவாக்கிய நான்காவது கதையைத்தான் நீங்கள் தேர்வு செய்தீர்களாமே? அப்படியானால் மத்த ஸ்கிரிப்ட்டுகள் சரியில்லையா?. அதற்கு பதிலளித்த சூர்யா, எல்லா கதையுமே நல்லாத்தான் இருந்துச்சு. ஆனால், என்னுடைய தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுவதற்கான ஸ்கோப் உள்ள கதையாகவும், எனக்கு செட்டாகிற மாதிரியும் ‘அஞ்சான்’ இருந்ததாலதான் அதைத் தேர்வு செஞ்சேன். இன்னும் சொல்லப்போனா அந்த மூணு கதையில ஒண்ணுதான் ‘எண்ணி ஏழு நாள்’, அந்தப் படத்துலதான் இப்போ கார்த்தி நடிக்கிறாரு என்றார் சூர்யா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி