கிளாஸ்கோ:-காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க நிகழ்ச்சியின்போது அதற்கான பாடல் ஒலிக்கப்பட்டது. லெட் தி கேம்ஸ் பிகின் என்ற அந்த பாடல் போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து நாடுகளின் கொடிகளை குறித்து பாடப்பட்டது.
போட்டி தொடங்கியவுடன் விளையாட்டு தவிர்த்து இந்தியாவின் பெயர் தலைப்பு செய்திகளில் அடிபட தொடங்கியது. இந்திய மூவர்ண கொடி வழக்கத்திற்கு மாறாக தலைகீழாக பிடிக்கப்பட்டது. டெல்லியில் கடந்த முறை நடந்த போட்டிகளில் 2வதாக வந்த இந்தியா இந்த முறை 215 பேரை போட்டிக்காக அனுப்பியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி