செய்திகள் இளைஞரின் வாயிலிருந்து 232 பற்களை நீக்கி மருத்துவர்கள் சாதனை!…

இளைஞரின் வாயிலிருந்து 232 பற்களை நீக்கி மருத்துவர்கள் சாதனை!…

இளைஞரின் வாயிலிருந்து 232 பற்களை நீக்கி மருத்துவர்கள் சாதனை!… post thumbnail image
மும்பை:-மும்பை புல்தானா பகுதியைச் சேர்ந்த ஆஷிக் கவை(17) என்ற பத்தாம் வகுப்பு மாணவன் கடந்த மாதம் வாயின் வலது பக்கத்தில் வீக்கம் இருப்பதாக அங்குள்ள ஜே.ஜே மருத்துவமனைக்குச் சென்றான். அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவனது வலது தாடையின் கீழ்ப் பக்கத்தில் இரண்டாவது கடைவாய்ப் பல்லைப் பாதிக்கும் அளவில் ஒரு அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இதற்குத் தீர்வாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் அவர்கள் முடிவெடுத்தனர்.

கடந்த திங்கட்கிழமை அன்று ஆஷிக்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது ஏழு மணி நேரம் நடைபெற்ற அந்த சிகிச்சையில் மருத்துவர்கள் மிகப் பெரிய ஆச்சரியத்தை சந்தித்தனர். வீக்கம் காணப்பட்ட பகுதியில் இருந்து சிறிய அளவிலான பற்களை மருத்துவர்கள் நீக்கத் தொடங்கினர். கடுகு அளவிலிருந்து சிறிய பளிங்கு அளவிலான பலதரப்பட்ட அளவில் மொத்தம் 232 பற்கள் அவனது கடைவாய்ப் பகுதியில் இருந்து நீக்கப்பட்டன என்று பல் மருத்துவப்பிரிவின் தலைவர் சுனந்தா திவாரே பல்வங்கர் தெரிவித்தார்.

இவை அனைத்தும் சாதாரண பற்கள் போன்ற வளர்ச்சியைக் கொண்டிருந்ததையும், ஒரே பல்லில் இருந்து வளர்ச்சி பெற்றதையும் குறிப்பிட்ட சுனந்தா, மருத்துவ நிகழ்வுகளில் இந்த செய்கை மிகவும் அசாதாரணமான ஒன்றாகும் என்றும் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி