செய்திகள்,விளையாட்டு பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளராக துங்கா நியமனம்!…

பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளராக துங்கா நியமனம்!…

பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளராக துங்கா நியமனம்!… post thumbnail image
ரியோடி ஜெனீரோ:-சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி ஜெர்மனி, நெதர்லாந்து அணிகளிடம் முறையே அரை இறுதி மற்றும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டு 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மோசமான தோல்வி எதிரொலியாக பிரேசில் அணியின் தலைமை பயிற்சியாளர் லூயிஸ் பெலிப் ஸ்காலரி கழற்றி விடப்பட்டார்.

உடனடியாக புதிய தலைமை பயிற்சியாளர் வேட்டையில் இறங்கிய பிரேசில் கால்பந்து சங்கம், பிரேசில் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் துங்காவை நியமித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடைபெறும் அடுத்த உலக கோப்பை போட்டி வரை துங்கா தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.50 வயதான துங்கா 1994-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற பிரேசில் அணியின் கேப்டனாக இருந்தவர் ஆவார். பின்னர் பிரேசில் அணிக்கு 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை பயிற்சியாளராக பணியாற்றினார்.

2010-ம் ஆண்டு உலக கோப்பையில் பிரேசில் அணி கால்இறுதியுடன் வெளியேறியதால், துங்காவுக்கு பிரியா விடைகொடுக்கப்பட்டது. துங்கா பயிற்சியின் கீழ் பிரேசில் அணி 60 ஆட்டங்களில் விளையாடி 42 ஆட்டங்களில் வெற்றியும், 12 ஆட்டங்களில் டிராவும், 6 ஆட்டங்களில் தோல்வியும் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. துங்கா 2-வது முறையாக பிரேசில் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை பிடித்து இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி