செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பீகாரில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட தண்டவாளம் நூலிழையில் தப்பிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ்…!

பீகாரில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட தண்டவாளம் நூலிழையில் தப்பிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ்…!

பீகாரில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட தண்டவாளம் நூலிழையில் தப்பிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ்…! post thumbnail image
பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் கயா அருகே உள்ள இஸ்மாயில்பூர்- ரபிகஞ்ச் நிலையங்களுக்கிடையே நேற்று பின்னிரவு புவனேஸ்வர்-புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுக் கொண்டிருந்தது.

அப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததால் ரெயில்களின் பாதுகாப்பு உறுதிபடுத்த அந்த ரெயிலுக்கு முன்னே அதே தண்டவாளத்தின் மீது சிறிது தூரத்தில் ஒரு பைலட் ரெயில் எஞ்சினும் சென்றது.

அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாவோயிஸ்ட்கள், சக்தி வாய்ந்த குண்டினை வெடிக்கச் செய்து ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ற தண்டவாளத்தை தகர்த்தனர். இந்த தாக்குதலில் தண்டவாளத்தின் சுமார் 3 மீட்டர் நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டது.

இதனால், முன்னால் சென்ற ரெயில் எஞ்சின் 4 மீட்டர் உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டு, தண்டவாளத்தை விட்டு விலகி, தடம் புரண்டது. பின்னால் வந்துக் கொண்டிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் இருந்து தப்பியது.

குண்டு வெடித்த வேகத்தில் தண்டவாளத்துக்கு மேலே உள்ள ரெயிலுக்கு மின்சாரம் சப்ளை செய்யும் கம்பிகள் சேதம் அடைந்தன. குண்டு வெடித்த இடத்தில் 4 மீட்டர் ஆழத்துக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் உயிர் பலி ஏதுமில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தண்டவாளம் சேதமடைந்த அந்த பாதை வழியாக செல்ல முடியாமல் இரு வழித் தடங்களிலும் 3 ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மேலும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அந்த ரெயில்களில் வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகளை ரெயில்வே அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இன்று பகலுக்குள் இப்பாதை வழியாக மீண்டும் ரெயில் போக்குவரத்து இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி