திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோடிக்கணக்கான வருவாய் வருகிறது. தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தினமும் உண்டியல் மூலமும் கோடிக்கணக்கான பணம் காணிக்கையாக வருகிறது.
இவ்வளவு வருமானம் வரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதன் முகப்பு வாயில் மற்றும் ராஜகோபுரத்தில் உள்ள சிலைகள் சிதிலமடைந்து வருவது பக்தர்களை வேதனை அடையச் செய்துள்ளது.
திருப்பதி ராஜ கோபுரத்தில் உள்ள சிலைகள் மற்றும் சிற்பங்கள் கைகள் உடைந்த நிலையிலும், பெயர்ந்து விழும் நிலையிலும் காணப்படுகிறது. கோபுரம் பல இடங்களில் சிதிலமடைந்துள்ளது.
ராஜகோபுரத்தின் மேலே உள்ள சுவர்களில் அரச மரம் சிறு செடிகள் போல முளைத்துள்ளது. இதனால் சுவர்களில் விரிசல் காணப்படுகிறது. ஆனால் கோவில் நிர்வாகம் அவ்வப்போது சிலைகளின் உடைந்த பாகங்களை ஒட்டியும், செடிகளை மேலோட்டமாக வெட்டியும் வருகிறது. அதற்கு முழுமையான தீர்வு காணப்படாததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி