செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் செவ்வாய் கிரகத்தை நெருங்குகிறது மங்கள்யான்!…

செவ்வாய் கிரகத்தை நெருங்குகிறது மங்கள்யான்!…

செவ்வாய் கிரகத்தை நெருங்குகிறது மங்கள்யான்!… post thumbnail image
ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த நவம்பர் 5 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது மங்கள்யான் விண்கலம்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய இந்த விண்கலம் தற்போது சூரிய வட்டப் பாதையில் 540 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தை (80 சதவீதம்) வெற்றிகரமாக கடந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் செப்டம்பர் 24 அன்று மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம் 5 ஆராய்ச்சி கருவிகளுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.தற்போது, மங்கள்யான் விண்கலத்திற்கும், பெங்களூருவில் இருக்கும் தொலை தொடர்பு மையத்திற்கும் இடையே தகவல் பரிமாற்றத்திற்கு 15 நிமிடங்கள் வரை ஆகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி