அதற்கு கெளதம்மேனன் உடன்படாததால், அடுத்து சீமானிடம் கதை கேட்ட சூர்யா அதுவும் பிடிக்காததால், லிங்குசாமி பக்கம் தாவினார். ஏற்கனவே அவர் ரன், சண்டக்கோழி என பல ஆக்சன் படங்களை கொடுத்தவர் என்பதால், அவரிடம் அதிக நம்பிக்கையோடு கதை கேட்டார் சூர்யா. ஆனால் அப்படி அவர் சொன்ன கதையும் சூர்யாவுக்கு பிடிக்கவில்லை.அதற்காக அவரை விடவில்லை லிங்குசாமி. அடுத்தடுத்து மேலும் இரண்டு கதைகள் சொன்னார். அதிலும் சூர்யா உடன்படவில்லை. அதையடுத்துதான் அஞ்சான் கதையை சொன்னார். தாதாயிசத்தை தழுவியக்கதை என்பதால் உடனே ஓ.கே சொன்ன சூர்யா, இப்போது அப்படத்திலும் நடித்து முடித்து விட்டார்.
இதுபற்றி லிங்குசாமி கூறுகையில், எனது படங்களில் அஞ்சான் ரொம்ப புதுசாக இருக்கும். முதலில் நான் சொன்ன மூன்று கதைகளை தவிர்த்தார் சூர்யா. அதனால் அந்த கதைகளை தூக்கிப்போட்டு விட்டேன். அதையடுத்து சொன்ன அஞ்சான் அவருக்கு மட்டுமின்றி எனக்கும் ரொம்ப வித்தியாசமான கதைக்களமாகவே தெரிந்தது. இப்போது படப்பிடிப்பை முடித்த பிறகு பார்த்தால் படம் ரொம்ப பெரிய அளவில் வந்திருக்கிறது. இதற்கு முன்பு சூர்யா நடித்த சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்களை மிஞ்சும் அளவுக்கு இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் உள்ளது. அந்த வகையில் அஞ்சான் ஆக்சன் பிரியர்களுக்கு பெரிய தீனியாக இருக்கும் என்கிறார் லிங்குசாமி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி