இதற்கு சிந்து என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தற்போது நாட்டின் பல பகுதிகளில் இதனை விளைவிக்கும் சோதனை முயற்சி நடப்பதாகவும் தெரிவித்தார். தங்களது முயற்சி வெற்றி பெறுவதுடன், கொட்டையில்லா மாம்பழங்களின் தரத்தையும் உயர்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் படேல் மேலும் கூறினார்.
இதனை பண்ணைகளிலும், நமது வீட்டிலும் கூட பயிரிட முடியும். தங்களது முதல் சோதனை முயற்சி மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள மண்டல பழ ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றதாக கூறிய படேல், மூன்று ஆண்டுகளில் நல்ல பழங்கள் காய்த்ததாக தெரிவித்தார். 200 கிராம் எடையுள்ள இந்த மாம்பழம் ஒவ்வொன்றிலும் நார்கள் மிக குறைவாக காணப்படுகிறது. ஆக கொட்டையில்லா மாம்பழங்களை இனி மக்கள் மகிழ்ச்சியுடன் உண்டு மகிழலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி