ஏற்கனவே பீனாவுக்கு இரக்க சிந்தனை அதிகம் உண்டு. அவரது கணவரும் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யில் பெரிய வேலையில் இருக்கிறார்.இந்நிலையில், ஆண்டர்சனும் பீனாவும் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். டேராடூனில் ரூ.9 கோடி செலவில் முதியோர் இல்லம் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்றும், அதற்காக ரூ.9 கோடி தருவதாகவும் ஆண்டர்சன் பீனாவிடம் கூறியுள்ளார்.ஆனால், அந்த பணத்தை பெறுவதற்கு முதலில் வரிப்பணமாக ரூ.1.30 கோடியை வங்கியில் செலுத்துமாறு பீனாவை வற்புறுத்தினார் ஆண்டர்சன். இதை நம்பிய பீனாவும் ரூ.1.30 கோடி பணத்தை பல்வேறு வங்கிகளின் (25) கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளார்.
அதன்பிறகு, பீனாவுக்கு வில்லியம் ஜார்ஜ் மற்றும் கெவின் பிரவுன் என்ற அறிமுகமில்லாத இருவரிடமிருந்து போன் வந்தது. அதற்கு பின், வேறு எந்த தகவலும் இல்லை. சந்தேகமடைந்த பீனா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். உடனே போலீசில் இதுபற்றி புகார் செய்தார். பீனா டெபாசிட் செய்த வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த போலீசார் அவரை ஏமாற்றிய ஆண்டர்சன், ஜார்ஜ், பிரவுன் மற்றும் அவர்களது கூட்டத்தில் இருந்த மற்றொரு நபர் மீதும் ஐ.பி.சி. 420 பிரிவின் படி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி