செய்திகள்,திரையுலகம்,விளையாட்டு லண்டனில் அனுஷ்காவுடன் சுற்றிய விராட் கோலி!…

லண்டனில் அனுஷ்காவுடன் சுற்றிய விராட் கோலி!…

லண்டனில் அனுஷ்காவுடன் சுற்றிய விராட் கோலி!… post thumbnail image
லண்டன்:-இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து வருவதாக அவ்வப்போது கிளுகிளுப்பான தகவல்கள் வருவது உண்டு. ஐ.பி.எல். தொடக்க விழாவில் போலியாக நடத்தப்பட்ட சுயம்வர நிகழ்ச்சியில் கூட உங்களது வருங்கால மனைவியாக யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்ட போது, கோலி உச்சரித்த பெயர் அனுஷ்கா ஷர்மா தான்.

விராட் கோலி தற்போது இங்கிலாந்து தொடரில் விளையாடி வருகிறார். அவரை காண்பதற்கு அவரது காதலி அனுஷ்கா ஷர்மாவும் இங்கிலாந்துக்கு பறந்து விட்டார். முதலாவது டெஸ்ட் முடிந்ததும் லண்டனில் இருவரும் சந்தித்து நீண்ட நேரம் செலவிட்டதாகவும், இருவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாகவும் அவர்களது நெருக்கமான வட்டாரத்தினர் விஷயத்தை கசியவிட்டுள்ளனர்.அது மட்டுமின்றி லார்ட்ஸ் டெஸ்டை ஸ்டேடியத்தில் அமர்ந்து நேரில் கண்டுகளித்த அவர், விராட் கோலியை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி