இந்நிலையில் நேற்று அங்கு செயல்பட்டுவரும் மேற்கத்திய துரித உணவகங்களான மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி, பிஸ்ஸா ஹட் போன்ற நிறுவனங்கள் புதிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு மூலப் பொருட்களை சப்ளை செய்யும் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த அரோரா ஓஎஸ்ஐ குழுமத்தைச் சேர்ந்த ஹுசி என்ற நிறுவனம் காலாவதியான மாட்டிறைச்சி மற்றும் கோழி வகைகளை மறுதேதியிட்டு விற்பனை செய்துள்ளதாக சீனத் தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டது.இந்த நிறுவனத்தின் சப்ளையை உடனே தடை செய்துவிட்டதாக அந்த உணவகங்கள் குறிப்பிட்டுள்ளபோதிலும் ஷாங்காயில் உள்ள சீன உணவு மற்றும் மருந்து நிறுவனம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. வாடிக்கையாளர்களையும் இந்த உணவுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அந்த அலுவலகம் தடை செய்துள்ளது.
கேஎப்சி, பிஸ்ஸா ஹட், டகோ பெல் போன்ற உணவகங்களை இங்கு நடத்திவரும் மெக்டொனால்ட்ஸ் மற்றும் யாம் பிராண்ட் நிறுவனங்கள் தாங்களும் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தனித்தனி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. உணவு பாதுகாப்பே மெக்டொனால்டில் முன்னுரிமை பெறுகின்றது.இதற்காக கடுமையான விதிமுறைகள் அனுசரிக்கப்படுகின்றன, சட்ட விரோத நடவடிக்கைகள் சகித்துக்கொள்ளப்படமாட்டாது என்று இந்நிறுவனம் தங்களது இணையதளத் தகவலில் தெரிவித்துள்ளது. ஹுசி நிறுவனம் தங்களுக்கு விற்பனை செய்துவந்த சாசேஜ் வகைகளை நிறுத்திவிட்டதாக தைவானின் டிங் சின் சர்வதேச குழுமம் தெரிவித்துள்ளது.கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதக் கணக்கெடுப்பின்படி சீனாவில் செயல்பட்டுவரும் இவர்களின் சங்கிலித்தொடர் டிகோஸ் சான்ட்விச் நிறுவனங்கள் 2000 என்பது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஹுசி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கொள்முதல் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அந்த வியாபார மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஷாங்காய் அலுவலகம் காவல்துறையுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி