செய்திகள்,தொழில்நுட்பம் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மூளை கண்டுபிடிப்பு!…

8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மூளை கண்டுபிடிப்பு!…

8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மூளை கண்டுபிடிப்பு!… post thumbnail image
ஓஸ்லோ:-நார்வே நாட்டில் உள்ள ஒஸ்லோ என்ற நகரை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் குழு ஒன்று நகரத்தின் தென்மேற்கு பகுதியில் ஆய்வு நடத்தி வந்தனர். அப்போது மிகவும் பழமையான ஒரு மனித மண்டை ஓடு ஒன்றை கண்டுபிடித்தனர். மனித மூளையுடன் இருந்த அந்த மண்டை ஓடு பத்து வயது சிறுவன் அல்லது சிறுமியின் மண்டை ஓடு என்பதை கண்டறிந்தனர். அந்த மண்டை ஓடு சுமார் 8000 வருடங்களுக்கு முந்தையது என்பதை ஆய்வில் அறிந்து அதிசயித்தனர்.

தொல்பொருள் ஆய்வு குழுவின் தலைவர் கெயுட் ரெய்டன் கூறும்போது, இதுவரை கண்டுபிடிக்காத அளவுக்கு மிகவும் பழமையான மூளையுடன் கூடிய மண்டை ஓட்டை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகவும், இது தொல்பொருள் உலகில் ஒரு பெரும் சாதனை என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த மூளையுடன் கூடிய மண்டை ஓடு ஓஸ்லோ நகரில் உள்ள மியுசியத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி