தியேட்டர் அதிபராக ஏகப்பட்ட பணத்தை சம்பாதித்த நான் அதை செலவு செய்யத் தெரியாமல் படம் எடுக்க போனேன். நான் எடுத்தது படம் தமிழ்ப்படம் அல்ல. ஹாலிவுட் படம் என்று பேச்சை நிறுத்தி சஸ்பென்ஸ் வைத்தவர் பிறகு தொடர்ந்து பேசும்போது புதிரை அவிழ்த்தார். அமெரிக்க நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப்பில் அந்த ஹாலிவுட் படத்தைத் தயாரித்தேன். அந்தப் படம் ரஜினி காந்த் நடித்த ‘ப்ளட் ஸ்டோன்’. என்று அவர் சொன்னபோது பலருக்கும் ஆச்சர்யம். காரணம்.ப்ளட் ஸ்டோன் படத்தைத் தயாரித்தவர் அசோக் அமிர்தராஜ். அபிராமி ராமநாதனோ அப்படத்தை தான் தயாரித்ததாகச் சொல்ல, பிறகு அவரது பேச்சிலிருந்தே விளக்கத்தை அறிய முடிந்தது.
அமெரிக்க நிறுவனத்துடன் தயாரித்த நான் அந்தப் படத்தைத் நம் ஊரில் ரிலீஸ் பண்ணினேன். அமெரிக்க கம்பெனி மற்ற நாடுகளில் ரிலீஸ் பண்ணினார்கள். இங்கே ரிலீஸ் பண்ணி கிடைக்கும் லாப நஷ்டம் எனக்கு. வெளிநாடுகளில் கிடைக்கும் லாப நஷ்டம் அவர்களுக்கு என்பதுதான் அக்ரிமெண்ட். நம்ம நேரம்.. வெளிநாடுகளில் நன்றாக ஓடிய ப்ளட் ஸ்டோன் படம் இங்கே சரியாக ஓடவில்லை. கையைக் கடித்துவிட்டது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி