செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நண்பன் நாயகியின் திருமணம் எப்போது..?

நண்பன் நாயகியின் திருமணம் எப்போது..?

நண்பன் நாயகியின் திருமணம் எப்போது..? post thumbnail image
சமீபகாலமாக தென் இந்திய படங்களுக்கு முற்றிலுமாக முழுக்கு போட்டு விட்ட ‘ஒல்லி பெல்லி’ அழகி இலியானா தற்போது இந்தி படங்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

சைஃப் அலிகானின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹேப்பி எண்டிங்’ படத்தில் நடித்து வரும் இலியானா திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.திருமணம் என்பது புனிதமானது, இரண்டு மனங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து வாழும் அந்த பந்தம் எனக்கு மிகவும் பிடிக்கும்.கண்டிப்பாக நான் என் மனம் கவர்ந்தவரை திருமணம் செய்வேன்.ஆனால் இப்போது இல்லை எனக் கூறியுள்ளார்.

சினிமாவில் மட்டுமே இப்போது என் கவனம் இருக்கிறது. கண்டிப்பாக உங்களிடம் சொல்லிவிட்டு தான் திருமணம் செய்வேன் எனவும் மேலும் என் திருமணம் மிக பிரம்மாண்டமாக மற்றும் இந்திய முறைப்படி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியில் முன்னனி நாயகியாக மாற முயன்று வரும் இலியானா தற்போது ஆஸ்திரேலிய நபர் ஒருவருடன் நெருங்கி பழகி வருவதாக மும்பை சினிமா தரப்புகள் தெரிவித்துள்ளன. ஆண்ட்ரூ நீபோன் என்ற அந்த ஆஸ்திரேலிய நபருடன் அதிகமாக பொது இடங்களிலும் தென் படுகிறாராம் இலியானா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி