ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் படத்தில் நடித்து வருகிறார் கமல். இரட்டைவேடத்தில் கமல் நடிக்கும் இப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகே ‘விஸ்வரூபம்-2′ வெளியிடப்படும் என அறிவித்திருக்கிறார் அவர் இவ்விரண்டு படங்களை அடுத்து கமல் தெலுங்கு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின..
இதற்கு தற்போது கமலே பதிலளித்துள்ளார்.’உத்தம வில்லன்’ ,’விஸ்வரூபம்-2′ படங்களை அடுத்து தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளேன்.
அதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறேன் எனவும் கூறியுள்ளார் அவர்..
மேலும் படம் முடிவானால் அந்த தெலுங்கு படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் எனவும் அறிவித்துள்ளார்..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி