180, வெப்பம், மாலினி 22 பாளையம்கோட்டை ஆகிய படங்களிலும் பல மலையாளம், தெலுங்குப் படங்களிலும் நடித்து சிறந்த நடிகை என்ற பெயரைப் பெற்றுள்ள நித்யா மேனன் விரைவில் படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. பெண்ணை மையப்படுத்திய கதையாக இந்தப் படம் இருக்கும் என்று தெரிகிறது. இதற்கான கதை, திரைக்கதையை நித்யா மேனன் ஏற்கெனவே எழுத ஆரம்பித்துவிட்டாராம்.
கவிதை எழுதுவதிலும், பாடுவதிலும் என பல திறமைகளை தனக்குள் வைத்திருக்கும் நித்யா மேனனின் இந்த புதிய இயக்குனர் அவதாரம் அவருடைய திரையுலக நண்பர்களை ஆச்சரியப்பட வைக்கவில்லை. ஏனென்றால், நித்யா மேனன் பல திறமைகளை வைத்திருப்பவர் என்றாவது ஒருநாள் அவர் படம் இயக்குவார் என்று எதிர்பார்த்தோம், அது சீக்கிரமே நடக்கிறது என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி