சென்னை:-ஜெய், நஸ்ரியா நடித்துள்ள திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருப்பவர் ஹீபா படேல். இதுதான் அவருக்கு சினிமா அறிமுகம். முஸ்லிமாக வேஷமிட்டு நஸ்ரியாவை காதலிக்கும் ஜெய்யை ஒரு தலையாக காதலிக்கும் முஸ்லிம் பெண் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் இந்த மாதம் வெளிவருகிறது. அதற்குள் ஹீரோயின் ஆகிவிட்டார்.
புதுமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கும் சென்னை சிங்கப்பூர் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோ. ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் சிங்கப்பூரில் நடக்கிறது. படத்தின் செலவில் பாதியை சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறதாம். காரணம் சிங்கப்பூரின் பெருமை பேசும் படமாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி