இதற்கிடையே வில்லன்களுடன் ரஜினி மோதும் அதிரடி சண்டை காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரஜினி படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்து விட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. அதோடு, சண்டை காட்சியில் டூப் நடிகரை யூஸ் பண்ணாமல் ரஜினி ரிஸ்க் எடுத்ததினால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டது என்றும் கூறப்பட்டது.
இப்போது அந்த செய்தியை மறுத்துள்ளார் அப்பட டைரக்டரான கே.எஸ்.ரவிக்குமார். அவர் பேஸ்புக்கில் விடுத்துள்ள செய்தியில், ரஜினி மயக்கம் போட்டு விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று வெளியான செய்திகளில் கொஞ்சமும் உண்மையில்லை. அவர் எப்போதும் போலவே படப்பிடிப்பில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். யாரோ தேவையில்லாமல் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி விட்டு வருகிறார்கள். அதனால் இதை யாரும் நம்ப வேண்டாம் எனறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி