அவர் இப்போது அனன்யா மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-படப்பிடிப்பு நடந்தபோது அனன்யா கொடுத்த டார்ச்சர் தாங்க முடியவில்லை. படம் முடிந்து நல்ல முறையில் வெளிவர வேண்டும் என்பதற்காகத்தான் இதனை வெளியில் சொல்லாமல் மறைத்திருந்தோம். ஆனால் அவர் படமே அவரால்தான் ஓடுவது போன்று பேசி வருவதால் இதை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.தினமும் 11 மணிக்குமேல்தான் ஷ¨ட்டிங் வருவார். நாங்கள் காலை 8 மணியிலிருந்து அவருக்காக காத்திருப்போம். வடபழனி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தால் அண்ணாசாலையில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில்தான் தங்குவேன் என்று அடம்பிடிப்பார். அவர் கணவர் தங்கிய செலவையும் நாங்கள்தான் கொடுத்தோம்.
நான் என் கணவருடன் கென்யா செல்ல இருந்தேன் உங்களுக்காக டிக்கெட்டை கேன்சல் செய்தேன். அதனால் எனக்கு இரண்டரை லட்சம் நஷ்டம் என்று சொல்லி அதனையும் வாங்கிக் கொண்டார். தமிழில் அவருக்கு பெரிய மார்க்கெட் இல்லை என்றாலும் 22 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தோம். அவரால் தினமும் எங்களுக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. இவ்வாறு நிகேஷ்ராம் கூறியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி