செய்திகள் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் ஓவியம் வரையும் பெண்!…

கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் ஓவியம் வரையும் பெண்!…

கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் ஓவியம் வரையும் பெண்!… post thumbnail image
இங்கிலாந்து:-இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேரி பிரிஸ்டன் (வயது 27)என்ற பெண் நிறைமாத கர்ப்பிணிகளின் வயிற்றில் அவர்கள் விரும்பும் படங்கள் வரைவதையே தொழிலாக கொண்டுள்ளார். பல கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களின் உள்ள படங்கள் மற்றும் பிடித்த திரைப்படங்களில் வரும் கேரக்டர்களின் படங்களை வரைய சொல்வதாகவும் அவர்கள் விரும்பிய படங்களை விரும்பிய வர்ணங்களில் வரைந்து தருவதை முதலில் ஹாபியாக கொண்டிருந்த தான், தற்போது இதையே முழு நேர தொழிலாக மாற்றிவிட்டதாக கூறுகிறார்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஓவியம் வரையும் இவரும் ஒரு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. தான் கர்ப்பமாக இருந்தபோது தன்னுடைய குழந்தை எப்படி வயிற்றினுள் தூங்கும் என கற்பனை செய்து தனது வயிற்றில் வரைந்ததாகவும், அந்த ஓவியத்தை தனது கணவர் பெரிதும் பாராட்டினாராம். அதன்பின்னர் Carrie கேரி பிரிஸ்டன் தனது தோழிகளும், உறவினர்களும் கர்ப்பமாக இருந்தபோது அவர்களுக்கு படம் வரைந்து கொடுத்ததாகவும், பின்னர் இதையே தற்போது தொழிலாக மாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதுவரை சுமார் 130 கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் பறாவை, விலங்குகள் மற்றும் இயற்கை காட்சிகளின் படங்கள் வரைந்துள்ளதாக கூறும்பிரிஸ்டன் , இந்த தொழிலில் தாயாக போகும் பெண்களை திருப்தியடைய செய்வதால் தான் மிகவும் பெருமை அடைவதாகவும் கூறுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி