முக்கியமாக, அசின், தமன்னா போன்று எப்போது இந்திக்கு செல்வீர்கள்? என்று அவரை நோக்கி கேள்விகள் எழுந்தபோது, இந்தியில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. தமிழ், தெலுங்கில் நடிப்பது நிறைவாக உள்ளது என்று பதிலளித்து விட்டார்.இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு பிடித்தமான நடிகர்களாக ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன், அபிசேக் பச்சன் போன்ற இந்தி நடிகர்களை குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி மீடியாக்களில் வெளியானதை அடுத்து, தமிழ்நாடு, ஆந்திராவைச்சேர்ந்த மெகா ஹீரோக்கள் கொதித்துப போய் உள்ளனர்.
தென்னிந்திய நடிகர்களில் ஒருவர்கூடவா இவருக்கு பிடிக்கவில்லை என்று ஹீரோக்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சில முக்கிய ஹீரோக்களின் ரசிகர்கள் இது சம்பந்தமாக அனுஷ்காவை இணையதளங்கள் மூலம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு டென்சன் செய்து வருகிறார்களாம். இதனால் வாய் கொடுத்து இப்படி வம்பில் மாட்டிக்கொண்டோமே என்று கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி