செய்திகள்,திரையுலகம் டாப்லெஸ் போஸ் கொடுத்த நடிகை எமி ஜாக்சன்!…

டாப்லெஸ் போஸ் கொடுத்த நடிகை எமி ஜாக்சன்!…

டாப்லெஸ் போஸ் கொடுத்த நடிகை எமி ஜாக்சன்!… post thumbnail image
சென்னை:-ஏ.எல். விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படம் மூலம்தான் தமிழுக்கு வந்தார் ஏமி ஜாக்சன். ஹாலிவுட் கவர்ச்சிப்புயலான இவர், அதற்கு முன்பெல்லாம் அங்குள்ள திரைப்படங்கள் மட்டுமின்றி, மாடலிங் துறையில் கொடிகட்டிப்பறந்தவர். அதிலும் இவர் ஆடையின்றி நடித்த சில விளம்பரப்படங்கள் ஹாலிவுட்டையே பற்றி எரிய வைத்தது. அந்த அளவுக்கு ஹாட் பீட்டாக திகழ்ந்தவர் எமி.

அப்படிப்பட்டவரை மதராசப்பட்டினம் படத்தில் துளியும் விரசமில்லாமல் போர்த்திக்கொண்டு நடிக்க வைத்தார் டைரக்டர் விஜய். ஹாலிவுட் பெண்ணாக இருந்தபோதும், அவரது பர்பாமென்ஸ் தமிழ் பெண்களுக்கு உரிய உணர்ச்சிகளை பிரதிபலித்தது. அதனால் அதையடுத்து, விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக் மட்டுமின்றி தாண்டவம் படத்திலும் நடித்த எமி, தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் விக்ரமுடன் நடித்துள்ளார். இதையடுத்து, சூர்யா நடிக்கும் ஒரு படத்தில் அவர் நடிக்கயிருக்கிறார்.

இந்நிலையில், எமி ஜாக்சன், லண்டனில் உள்ள மாடலிங் ஏஜன்சி ஒன்றுக்காக மேலாடையின்றி மாடலாக போஸ் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். வெள்ளை நிற கருப்பு கட்டம் போட்ட பேண்ட் அணிந்து, தலையில் ஒரு தொப்பியுடனும், மேலாடை எதுவும் இன்றி கைகளை வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்துள்ள படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி