செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க இயக்குனர் சேரனின் புதிய திட்டம்!…

திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க இயக்குனர் சேரனின் புதிய திட்டம்!…

திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க இயக்குனர் சேரனின் புதிய திட்டம்!… post thumbnail image
சென்னை:-புதிய படங்களை டி.வி.டி. மூலம் வீடுகள் தோறும் வினியோகிக்கும் வகையில், ஒரு புதிய திட்டத்தை டைரக்டர் சேரன் தொடங்கியிருக்கிறார். இந்த திட்டத்துக்கு அவர், ‘சினிமா டு ஹோம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.டி.டி.எச், இண்டர்நெட், கேபிள் டி.வி, டி.வி.டி. உள்பட பல வழிகளில் புது படங்களை வீடுகள் தோறும் நேரடியாக கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டம் தயாராகி இருக்கிறது. இதன் தொடக்க விழா, சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. அதில் கலந்துகொண்டு டைரக்டர் சேரன் பேசியதாவது:-

கடந்த வருடம் வெளியான படங்களின் எண்ணிக்கையில் 10 சதவீத படங்களே வெற்றி பெற்று முதலீடு செய்த தொகையை மீட்டு இருக்கிறது. 90 சதவீத படங்கள் தோல்வி அடைந்துள்ளன. இந்த ஆபத்தான நிலையை அலசி ஆராய்ந்து பார்த்ததில் மக்களின் நேரமின்மையும், மக்களுக்கான வேலைப்பளுவில் கிடைக்கும் நேரத்தில் திரைப்படம் பார்க்கும் பழக்கமும், அதற்கான வசதியும் வந்து விட்டதும்தான் காரணம்.இதை பயன்படுத்தி சில சமூக விரோத சக்திகள் அவர்களது சந்தர்ப்பங்களை பயன்படுத்தி சம்பாதிக்கும் சூத்திரம் தெரிந்தவர்கள், அனுமதியின்றி திரைப்படங்களை பல இடங்களில் திருட்டு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தவும், அதற்கு மக்களை அடிமைகளாக்கி திருட்டுத்தனமாக பார்ப்பது சரி எனவும் சொல்ல வைத்து விட்டார்கள்.

திருட்டுத்தனத்தை களைந்து முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுப்பதே எங்களின் நோக்கம். இஅதை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே சினிமா டு ஹோம். இதன் மூலம் தயாரிப்பாளர்களின் முதலீட்டை மதிக்காமல் திருட்டுத்தனமாக களவு செய்யும் கும்பலிடம் இருந்து சினிமாவை மீட்க முடியும்.நடப்பு ஆண்டில் 298 படங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 159 படங்கள்தான் திரைக்கு வந்துள்ளன. மீதி படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் முடங்கியுள்ளன. சினிமா டு ஹோம் மூலம் முடங்கி கிடக்கும் படங்களுக்கு விடிவு காலம் ஏற்படும்.

புது டி.வி.டிகளை வீடுகளுக்கு சப்ளை செய்யும்போது, தியேட்டர்களிலும் திரையிடப்படும். பெரிய படங்கள் தியேட்டர்களில் திரையிடப்பட்டு ஒரு வாரம் கழித்து டி.வி.டி.யாக வெளியிடப்படும். இதற்காக 7 ஆயிரம் முகவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு முகவரின் கீழ் 4 ஆயிரம் குடும்பங்கள் இருக்கும்.முதல்கட்டமாக, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஆள், சிவப்பு எனக்கு பிடிக்கும், மேகா, அப்பாவின் மீசை, வேல்முருகன் போர்வெல்ஸ் ஆகிய படங்கள், சினிமா டு ஹோம் மூலம் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு டைரக்டர் சேரன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி