லார்ட்ஸ்:-இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 95 டெஸ்டில் விளையாடி 359 விக்கெட்டும், 180 ஒரு நாள் போட்டியில் 255 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.லார்ட்ஸ் மைதானத்தில் அதிக விக்கெட் கைப்பற்றியவர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைக்க இருக்கிறார்.
அவர் இயான் போத்தமின் சாதனையை முறியடிக்க உள்ளார். போத்தம் 15 டெஸ்டில் 69 விக்கெட் கைப்பற்றியுள்ளார். அவரை முந்த ஆண்டர்சனுக்கு இன்னும் 2 விக்கெட்தான் தேவை. அவர் 15 டெஸ்டில் 68 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.இந்தியாவுக்கு எதிராக தொடங்கும் டெஸ்டில் ஆண்டர்சன், போத்தமின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி