செய்திகள்,திரையுலகம் தெலுங்கில் வசூலைக் குவிக்கும் ‘த்ரிஷ்யம்’!…

தெலுங்கில் வசூலைக் குவிக்கும் ‘த்ரிஷ்யம்’!…

தெலுங்கில் வசூலைக் குவிக்கும் ‘த்ரிஷ்யம்’!… post thumbnail image
ஐதராபாத்:-மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘த்ரிஷ்யம்’ படம், அதன் பின்னர் கன்னடத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தெலுங்கில் வெங்கடேஷ், மீனா, நதியா மற்றும் பலர் நடிக்க நடிகை ஸ்ரீப்ரியா இயக்கத்தில் வெளியானது. சமீபத்தில் தெலுங்கில் தொடர்ந்து குடும்பப் பாங்கான படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இந்தப் படத்திற்கும் படத்தின் முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம். படத்திற்கு வெளிவந்துள்ள விமர்சனங்களும் எதிர்மறையாக இல்லாமல் இருப்பதாலும் அனைத்து ரசிகர்களும் வந்து படத்தைக் கண்டு ரசிக்கிறார்களாம்.

வெங்கடேஷ், மீனா நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்திருப்பதாலும், மலையாள ரீமேக்காக இருந்தாலும் மலையாள வாடை சிறிதும் இல்லாமல், தெலுங்கு மக்களுக்கு ஏற்ற விதத்தில் படத்தை உருவாக்கியிருப்பதும் படத்திற்கு வெற்றிக்குக் காரணமாகக் குறிப்பிடுகிறார்கள். முதல் இரண்டு நாட்களிலேயே படம் சுமார் 6 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்திருக்கிறது. அது மட்டுமல்ல படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமையை முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று சுமார் 7 கோடி ரூபாய்க்கும் விலை பேசியுள்ளதாகவும் தெரிகிறது. மிகப் பெரிய பட்ஜெட் இல்லாமல் சுமாரான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், இந்த வாரத்திலேயே மிகப் பெரிய லாபத்தைப் பார்த்துவிடும் என ஆந்திரத் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி