மாணவிக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பள்ளியை சேர்ந்த ஊழியர்கள் தான் இச்சம்பவத்தில் குற்றவாளிகள் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.இது குறித்து பெங்களூர் நகர கூடுதல் ஆணையளரான கமல் பந்த் கூறுகையில்:-
இந்த கற்பழிப்பு சம்பவம் பள்ளிக்குள் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அப்படி தான் புகார் கொடுத்துள்ளனர். தனது வகுப்பறையை விட்டு திங்களன்று காலை 11 மணியளவில் அம்மாணவி வெளியே வந்தபோது, யாரோ ஒரு நபர் மாணவியை பள்ளிக்கு வெளியே அழைத்துச்சென்று கற்பழித்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்ற மாணவி தனது பெற்றோரிடம் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக பந்த் கூறினார். பெற்றோரின் புகாரை பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி