நைஜர்:-பாகிஸ்தான் தலிபான்களின் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த மலாலா யூசுப்சாய், நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தலைநகர் அபுஜாவில் நேற்று இந்த சந்திப்பில் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோருக்கு அவர் ஆறுதல் சொன்ன போது, பல பெண்கள் துக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் வாய் விட்டு கதறி அழுதனர்.இன்று தனது 17வது பிறந்த நாளை நைஜீரியாவில் கொண்டாடும் மலாலா, அந்நாட்டின் அதிபர் குட்லக் ஜொனாத்தன்-ஐ சந்தித்து பேசுகிறார்.எனது இந்த பிறந்த நாள் ஆசை கடத்தப்பட்ட எங்கள் பெண்களை மீட்டுத் தாருங்கள் என்பதாக தான் இருக்கும் என மலாலா தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி