இறுதி ஆட்டத்தில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிலிப்லாம் தலைமையிலான ஜெர்மனி– தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள லியோனல் மெர்சி தலைமையில் உள்ள அர்ஜென்டினா அணியும் மோதின.இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாகவே தொடங்கியது.ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளின் கோல் வாய்ப்பும் மயிரிழியில் பறி போக, நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரமான 90 நிமிடங்கள் கடந்தும் ஸ்கோர் 0-0 என்ற நிலையில் தான் இருந்தது.
கூடுதலாக கொடுக்கப்பட்ட நேரத்தில் 113-வது நிமிடத்தில் ஜெர்மனியின் மரியா கோட்சே அடித்த அசத்தலான கோலால் ஜெர்மனி தனது கணக்கை வரவு வைத்தது.அடுத்த 7 நிமிடங்கள் வரை ஜெர்மனியின் கணக்கை சமன் செய்ய அர்ஜென்டினா வீரர்கள் நடத்திய போராட்டம் பலன் அளிக்காததால் ஒற்றை கோலில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஜெர்மனி, வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது.ஏற்கனவே 3 முறை உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி, இந்த வெற்றியின் மூலம் 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி