செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் பெயரை வெளியிட்ட சுந்தர். சி…!

விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் பெயரை வெளியிட்ட சுந்தர். சி…!

விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் பெயரை வெளியிட்ட சுந்தர். சி…! post thumbnail image
‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்குப் பிறகு விஷால், ஹரியுடன் இணைந்து ‘பூஜை’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பது 3வது முறையாகும்.

இப்படம் முழு நீள காமெடி பொழுதுபோக்கு படமாக உருவாகிறதாம். ‘எதிர் நீச்சல்’, ‘மான் கராத்தே’ ஆகிய படங்களில் நடித்த சதீஷ் இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதுவரை பெயரிடப்படாமல் இருந்த இப்படத்திற்கு தற்போது ‘ஆம்பள’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகத ராஜா’ முடிவடைந்தும் வெளிவராத நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி