செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மலையாள நடிகருடன் காதல் கொள்ளும் பாவனா…?

மலையாள நடிகருடன் காதல் கொள்ளும் பாவனா…?

மலையாள நடிகருடன் காதல் கொள்ளும் பாவனா…? post thumbnail image
மலையாள நடிகர் அனூப் மேனனும் பாவனாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. அனூப்மேனன் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவரும் பாவனாவும் புது படமொன்றில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அடிக்கடி தனிமையில் சந்தித்து காதல் வளர்த்தனர். விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்ததும் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனூப்மேனனிடம் இது குறித்து கேட்டபோது பாவனாவும் நானும் நண்பர் களாகத்தான் பழகுகிறோம் என்றார். ஆனால் மலையாள பட உலகினர் இருவரும் காதலிப்பது உறுதி என்கின்றனர்.

பாவனாவுக்கு தற்போது 28 வயது ஆகிறது. எனவே இந்த வருடத்திலேயே அவருக்கு திருமணத்தை முடிக்க பெற்றோர் தீவிரம் காட்டுகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி