இதனிடையே இந்தித் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் ஹிரித்திக் ரோஷன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் 50 கோடி ரூபாய் சம்பளம் பெறப் போவதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஷுதோஷ் கௌரிகர் அடுத்து எடுக்கப் போகும் ‘மொகஞ்சதாரோ’ படத்தில் நடிப்பதற்காகத்தான் ஹிரித்தி அவ்வளவு சம்பளம் கேட்டிருக்கிறார் என்கிறார்கள்.
இந்தப் படம் ஒரு சரித்திரப் படமாக உருவாக உள்ளதாலும் நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடைபெறலாம் என்ற விதத்திலுமதான் ஹிரித்திக் அவ்வளவு பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டிருக்கலாம் என்கிறார்கள். ஹிரித்திக் நடிக்கும் படங்களுக்கு உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்தப் படம் ஒரு சரித்திரப் படம் என்பதால் நிச்சயம் எதிர்பார்ப்புக்கு மேலும் அமைய வாய்ப்பிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி