இந்நிலையில் அரச குடும்பத்திற்கு சொந்தமான் ராவா தீவின் கடற்கரை ஓரமாக மாடல் அழகியின் உடல் கண்டெடுக்கபட்டு உள்ளது.அவர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்பட்டது.ஆனால் அவரது உடலில் ஆங்காங்கே ரத்த காயங்கள் உள்ளன.ஆனால், இதை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பந்தப்பட்ட இளவரசரிடம் விசாரணை நடத்தப்பட்டதா என்ற தகவல் தெளிவுபடுத்தப்படவில்லை.இதுபோல் கடந்த மாதம் லண்டனை சேர்ந்த ஒரு பயணியின் சடலமும் இந்த தீவில் கண்டெடுக்கபட்டது. அவரது பெயர் ஹாரத் ஹண்ட்லி (வயது 34).
ஜோஹர் அரச குடும்பத்தினர் சம்பந்தப்பட்டு, இதற்கு முன்பும் அந்த்த் தீவில் பல வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 2012ம் ஆண்டில், சுல்தானின் படகுக்குள் சென்றதாகக் கூறி நான்கு சுற்றுலாப் பயணிகள் அரச குடும்பக் காவலர்களால் தாக்கப்பட்டனர். 2005ம் ஆண்டில் ஜோஹர் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவர், கும்பலை அழைத்துச் சென்று ஒரு பிரேசில் தம்பதியின் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார். அங்கிருந்த விருந்தினர்களும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டனர்.என்பது குறிப்பிட தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி