அரசியல்,செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பட்ஜெட்டில் வரி விதிப்பு காரணமாக குளிர்பானங்கள் விலை உயர்வு!…

பட்ஜெட்டில் வரி விதிப்பு காரணமாக குளிர்பானங்கள் விலை உயர்வு!…

பட்ஜெட்டில் வரி விதிப்பு காரணமாக குளிர்பானங்கள் விலை உயர்வு!… post thumbnail image
புதுடெல்லி:-மத்திய பட்ஜெட்டில் குளிர்பானங்கள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் குளிர்பானங்கள் மீது இந்த அளவுக்கு வரி உயர்த்தப்பட்டது இல்லை. எனவே இந்த தடவை குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு இருக்கிறது.

வரி உயர்வு காரணமாக குளிர்பானம் நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் ரூ.600 கோடி இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. இந்த இழப்பை சரிகட்ட வேண்டுமானால் வரி உயர்வு சுமையை அப்படியே நுகர்வோர் தலையில் சுமத்த குளிர்பான நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.எனவே குளிர்பானங்கள் விலையை தற்போதைய விலையில் இருந்து 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளன. எனவே குளிர்பானங்கள் விலை விரைவில் கணிசமாக உயர உள்ளது.

500 மில்லி, ஒரு லிட்டர் மற்றும் 1½ லிட்டர் குளிர்பானங்கள் விலை ரூ.2 முதல் ரூ.4 வரை உயரும் என்று தெரிகிறது. ஆனால் மிகச் சிறிய குளிர்பானங்கள் விலையில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.இந்த விலை உயர்வு காரணமாக குளிர்பானங்கள் விற்பனையில் சரிவு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. நடப்பாண்டில் 3 மாதங்களில் இந்தியாவில் குளிர்பானம் விற்பனை 6 சதவீதம் அதிகரித்து இருந்தது. இந்த வளர்ச்சி நீடிக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி