கத்தி படத்தில் விஜய் நடிக்கும் கேரக்டரின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியானது. பத்திரிகை செய்திகளை பின்னணியாக வைத்து இதை உருவாக்கி இருந்தனர். எனவே ஏதேனும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகலாம் என பேச்சு கிளம்பியுள்ளது.
மும்பை, ஐதராபாத் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. சமந்தா ஜோடியாக நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். செப்டம்பர் 20–ந்தேதி இவ்விழா நடக்கிறது. இதற்காக விஜய், சமந்தா, முருகதாஸ் மற்றும் இதர நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் லண்டன் செல்கிறார்கள்.
பாடலுக்கு நடன கலைஞர்கள் நேரடியாக மேடையில் நடனம் ஆடுகின்றனர். பின்னர் விஜய், சமந்தா இருவரும் மேடையில் தோன்றி தொகுப்பாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகின்றனர். கத்தி படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி