அதன் பின்னர்தான் ரஜினிகாந்த் மோஷன் கேப்சரிங் டெக்னாலஜியில் ‘கோச்சடையான்‘ படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாகவே, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘லிங்கா’ படத்தை ஆரம்பித்து உடனே படப்பிடிப்புக்கும் சென்று விட்டார்கள்.கடந்த ஒரு மாத காலமாக ஐதராபாத்தில் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்தும் படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் இப்படத்திற்காக சில முக்கியமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டதாம். ‘ரோப்’ சீன் என அழைக்கப்படும் கயிறு கட்டி நடிக்கும் சண்டைக் காட்சிகள், குதிக்கும் காட்சிகள் என சில காட்சிகளில் ரஜினிகாந்த், டூப் இல்லாமல் நடித்தாராம். பழைய புத்துணர்ச்சியுடனும், வேகத்துடனும் ரஜினிகாந்த் சண்டையிட்டார் என படப்பிடிப்பை நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர். ‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்டமான வெற்றியை நோக்கி ‘லிங்கா’ படத்தை உருவாக்கி வருகிறார்களாம். ரஜினிகாந்த் மிகுந்த ஈடுபாட்டுடன் படத்தில் நடித்து வருகிறார் என்கிறார்கள்.ரஜினியின் உடல்நலனைக் கருதி மருத்துவர்கள் ஆலோசனைப்படி மிகுந்த பாதுகாப்புடன்தான் சண்டைக் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி