செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பிரபல பாலிவுட் நடிகை ஜோஹ்ரா செகல் மரணம்!…

பிரபல பாலிவுட் நடிகை ஜோஹ்ரா செகல் மரணம்!…

பிரபல பாலிவுட் நடிகை ஜோஹ்ரா செகல் மரணம்!… post thumbnail image
புதுடெல்லி:-பிரபல இந்தி நடிகையும், நடனப் பெண்மணியுமான ஜோஹ்ரா செகல் தனது 102வது வயதில் இன்று காலமானார். 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி பிறந்த அவர், நடன இயக்குனரான உதயசங்கர் குழுவில் நடனப் பெண்மணியாக நடித்து வந்தார். 1935 முதல் 1943 வரை அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளில் செகலின் நடனம் பெருத்த வரவேற்பை பெற்றது.

நடனமாடுவது மட்டுமல்லாமல், படங்களில் சிறப்பாக நடித்தும் அவர் சாதனை படைத்துள்ளார். பாஜி ஆன் த பீச் மற்றும் ஹம் தில் சூ கே சனம் ஆகிய சிறப்பான படங்களில் நடித்துள்ளார் செகல். கடைசியாக கடந்த 2007ல் அவர் சவாரியா படத்தில் தான் செகல் நடித்திருந்தார். இந்திய அரசின் சிறப்பு விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை இவர் பெற்றிருந்தார். அவரது மறைவிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், இயக்குனரும் தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் ஆகியோர் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி