இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிற சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு, ஒற்றுமையின் சின்னம் என்னும் வகையில், உலகிலேயே உயரமான சிலை நிறுவ வேண்டும் என்று குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடி விரும்பினார். அதற்கான திட்டம் தீட்டப்பட்டது.அதன்படி குஜராத்தில் பாரூச் என்ற இடத்தில், பட்டேலுக்கு சர்தார் சரோவர் அணை அருகே 597 அடி உயரத்தில் உலகிலேயே உயரமான இரும்புச்சிலை 700 டன் இரும்பில் அமைக்கப்படுகிறது.
பட்டேலின் 138-வது பிறந்த தினத்தில் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானியுடன் சேர்ந்து இதற்கான அடிக்கல்லை நாட்டினார்.சிலை அமைக்கும் திட்டப்பணிகள் கடந்த ஜனவரி 26ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.2,500 கோடி ஆகும். இந்த திட்டப்பணிகளுக்காக குஜராத்துக்கு ரூ.200 கோடி, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி வெளியிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி